business

img

இந்தியர்களின் பணம் குறித்து சுவிஸ் வங்கியிடம் தகவல் கேட்கப்பட்டுள்ளது.... ஒன்றிய நிதியமைச்சகம் விளக்கம்....

புதுதில்லி:
சுவிஸ் நாட்டில் உள்ளஇந்தியர்களின் பணம் குறித்து சுவிஸ் வங்கியிடம் தகவல் கேட்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

2020 ஆம் ஆண்டு இறுதியில் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்புப் பணம் 20 ஆயிரத்து 700 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் , இது 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமென ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஊடகங்களில் வெளியான செய்திக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.  சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் அதிகரிப்பு அல்லது குறைவு குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் சுவிஸ் வங்கியிடம் தகவல் கேட்கப்பட்டுள்ளது என்றும்   சுவிஸ் வங்கியில் உயர்ந்திருப்பதாக கூறப்படும் வந்த பணம் இந்தியர்கள் உடையதா அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள் உடையதா அல்லதுமூன்றாம் நாடுகளிலுள்ள இந்திய நிறுவனங்கள் உடை
யதா என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை என்றும்  நிதியமைச்சம் விளக்கம் அளித்துள்ளது. 

மேலும் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள இந்திய நிறுவனங்களின் வர்த்தக பரிமாற்றம் காரணமாக இந்த டெபாசிட் உயர்வு ஏற்பட்டிருக்கலாம் என்றும்,  இந்தியாவில் உள்ள சுவிஸ் வங்கிகளின் வர்த்தகம் காரணமாகவோ ஸ்விஸ் வங்கி மற்றும்இந்திய வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகளின் காரணமாகவோ ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் விளக்கிக்கொண்டுள்ளது.

;